"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" -- இதிலிருந்து தமிழ் எவ்வளவு பழமையானது தொன்மையானது என்பது புலப்படும். அவ்வளவு பழமையான கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம். "பகிர்ந்து உண்ணுதல்" தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு பகிர்ந்து உண்ணுவதை வலியுறுத்தும் உணவுகளில் ஒன்று தான் பிட்சா (pizza). நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்ற ஐயம் எழக்கூடும். பிட்சாவை எவ்வாறு பரிமாறுகிறார்கள் என்று எண்ணிப்பார்ப்போமேயானால் அது நமக்கு விளங்கும். பிட்சாவை பொதுவாக நான்காகவோ, ஆறாகவோ, எட்டாகவோ தான் பகிர்ந்து கொடுப்பார்கள். இதை தான் நம் தமிழ் கலாச்சாரமும் எடுத்துரைக்கிறது. நம் பாரம்பரிய உணவான வெங்காய ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம், தேங்காய் ஊத்தப்பம் ஆகியவற்றின் மேல் நாட்டு தழுவல் தான் பிட்சா.
பி.கு.:
இந்த பதிவு எழுதும் பொது, இத்தாலியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்த சான்றுகள் ஏதேனும் இருக்குமோ என்று சிறிய ஆய்வு செய்தேன். ரசிகர்களின் (எவண்டா அவன்!) அதீத வேண்டுகோளால் இப்பதிவை இத்துடன் முடித்துக்கொண்டேன்.