Saturday, October 29, 2016

கதிரேசன் முதன்முதலில் எழுதிய பதிவிற்க்கு நிறைய லைக்-கள், நிறைய   வாழ்த்துக்கள் கிடைத்தது.  சிலர் அவன் பதிவு தனக்கு மனகிளர்வை உண்டாக்கியதாக உணர்ந்தனர்.  சிலர் ஒருபடி மேலே போய் 'நவீன இலக்கியத்தின் விடிவெள்ளி' என புகழ்ந்தனர்.  பூரித்துப்போனான்.  இருப்பினும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

சில தினங்கள்  கழித்து, நிறைய ஆன்லைன் நண்பர்களிடமிருந்து அடுத்த பதிவு எப்போது என்ற கேள்விகள் எழத்தொடங்கியது.  தனக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்தான்.

அடுத்த பதிவை எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானான்.  எதை பற்றி எழுதுவது என்று எண்ணினான்.  சமூகத்திற்கு நல்ல ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்ற சமூக பொறுப்பு அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.  ரெம்ப நேரம் சிந்தித்த பிறகும் ஒன்றும் மட்டுப்படவில்லை.  கடைசியில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தான்.

எழுத ஆரம்பித்தால் வார்த்தை வரவில்லை.  சிறிது பயம் தொற்றிக்கொண்டது. பலமணிநேர ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, வார்த்தைகள் புலப்பட்டன.  சிறிது பெருமையுடனும், கனத்த மனதுடனும், அவன் எழுத ஆரம்பித்தான் "கதிரேசன் முதன்முதலில் எழுதிய பதிவிற்க்கு . . ."

Tuesday, June 10, 2014

சென்னையில் ஒரு வெயில் காலம்...

அன்று மதியம் வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். சூரியனின் தாபத்திற்கு முன் என் ஆணவம் அடங்கி தலை குனிந்தேன். என் மேல் தண்ணீர் விழுவதை உணர்ந்தேன். சுருங்கிய கண்ணோடு மேலே எட்டிப் பார்த்தேன். மாடி வீட்டு ஜன்னல் குளிரூட்டி அதன் வேலை பழு தாங்காமல் அழுதுகொண்டிருந்தது. என் தோளில் அதன் கண்ணீர்.  கடந்து, வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

வாசலில் இருந்த கரு நிற கேட் அன்று காலையிலிருந்து அடித்த வெயிலுக்கு சான்றாக வெப்பத்தை கக்கியது. இந்த வெயிலுக்கு ஒளிய விலக்கும் வெள்ளை வண்ணமும் கூட சூடாகத்தான் இருக்கும்.

நாம் நேராக சென்றாலும் நமக்கு பக்கவாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர்வோம். தெருவில் சிறுவர்கள் சுமார் நாற்பது டிகிரி வெயிலை சிறிதும் மதிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தெருவோரம் இருந்த மின் கம்பத்தில் ஒரு காலை வைத்து நாய் ஒன்று அதை ஈரம் செய்து கொண்டிருந்தது. நீரின் கொள்ளளவில் குளிர் சாதனப்பெட்டி வென்றது. ஆங்காங்கே இருந்த ஒரு சில மரங்களும் சிறிதும் அசையாமல் காணாமல் போன காற்றுக்காக காத்திருந்தன.

மெல்ல நடந்து கொண்டே மதிய சாப்பாடு சாப்பிட எங்கு போகலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். ஒட்டு மொத்த உடம்பை வெயிலில் அலைந்து வதைக்காமல், நாக்கையும் வயிற்றையும் பலிகடா ஆக்கி அருகிலிருந்த சுமாரான கடையில் சாப்பிடலாம் என் உத்தேசித்தேன். இது ஒரு தற்காலிக சாக்குப்போக்கு தான்.

சிறிய கடை. அதிக கூட்டம். சூடான சாப்பாடு. பரபரப்பாக இரண்டடிக்கொன்றென சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறிகள். கிடைத்த இடத்திலெல்லாம் மேஜை போடப்பட்டிருந்தது. சுறுசுறுப்பாக பரிமாறிக்கொண்டிருந்தனர். கடையினுள்ளே இருந்த வெப்பம் வெளியே இருந்த வெப்பத்திற்கு சளைத்ததல்ல.

ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தேன். பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் கடலை மிட்டாய் வாங்கி அதை கடவாய் பல்லிற்கு கொடுத்து அசை போட்டுக்கொண்டே வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.

தெருவில் சிறுவர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நாய் என் வீட்டு கால் மிதியில் தஞ்சம் புகுந்திருந்தது. நான் வந்ததும் உள் மனதில் திட்டிக்கொண்டே அடுத்த வீட்டு திண்ணைக்கு சென்றது. குளிர் சாதனப்பெட்டி தரையை நன்றாகவே நனைத்திருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தேன். ஒரு கடமையை முடித்த மன நிறைவு!

அன்பிற்கு நன்றி!

எத்தன ஈமெயில்! எத்தன SMS! நான் எழுதுன நாலு போஸ்ட்டுக்கு இப்படி ரசிகர்கள் இருப்பாங்கனு நெனச்சி பாக்கல. என் blog-ல அப்படி எது இவங்கள ஹெவியா லைக் பண்ண வச்சதுன்னு தெரியல.

இந்த அளவில்லாத அன்பிற்கு நன்றி!

இதுக்கு கைம்மாறு செய்ற மாதிரி நான் மறுபடியும் ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். முன்னால "என் சில வரிகள்"-னு ப்ளாக் எழுதுனேன். அது ஏனோ நியூமராலஜி படி சரியா வரல. அதனால இப்ப ப்ளாக் பேரை "கோழி கிறுக்கல்"-னு மாத்திட்டேன். இந்த தலைப்பு ஆழ்ந்த சிந்தனைக்கு கெடச்ச அரும்பரிசு. சின்ன வயசுல நான் எழுறத பாத்துட்டு கோழி கிறுக்குன மாதிரி இருக்குனு எல்லாரும் சொல்லுவாங்க. இப்ப நான் எழுதுன நாலு போஸ்ட் பாத்ததும் எனக்கும் அதே தான் தோணுச்சி. அதனாலேயே இந்த தலைப்பை பிக்ஸ் பண்ணிட்டேன்.

முன்ன மாதிரி இனியும் இந்த blog-ல உருப்படியா ஒன்னும் இருக்காது. அதனால "எதிர்பாத்து வராத, ஏமாந்து போவாத..."

Tuesday, May 24, 2011

என்னத்த சொல்ல!!

வடை போச்சே!

'சூடான வத்தல்' கடையில் சூடான மெது வடை சாப்பிடலாமென்று போயிருந்தோம். அப்போது முன்னமே செய்து வைத்திருந்த சூடில்லாத வடைகள் சில இருந்தன. கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை சூடான வடையா கொடுங்க என அங்கு கவுன்டரில் இருந்தவரிடம் சொன்னேன். சூடான வடைகள் தயாரானதும் அவற்றை ஆறிய வடை கூட கலந்து போட்டார். அப்புறம் சூடான வடைல ஒன்னு ஆறிய வடைல ஒன்னு கொடுத்தார். நான் சுட்டி காட்டியும் அவர் அது சூடான வடைதான்னு சொன்னார். அவர் வியாபார உத்தியை கண்டு மெய்மறந்து போனேன்.

நரி கூட காக்கா கிட்டருந்து வடை வாங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காது!
------------------------------------------

விலைக்கடை

சென்ற வாரம் ரேஷன் கடைக்கு சர்க்கரை வாங்க சென்றிருந்தேன். அங்கு கவுன்டரில் இருந்தவர் ரேஷன் கார்டில் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெயும் வாங்கியதாக குறித்தார். பின்னர் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து மின்னணு ரசீது எந்திரத்தில் (electronic billing machine) போட்டு சமையல் எண்ணெயை கிராஸ் செய்தார். சர்க்கரைக்கு மட்டும் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டார். நான் ஏன் சமையல் எண்ணெயை சேர்த்தீர்கள் என கேட்ட போது, "அப்டி இப்டி அமுக்கும் போது ஆயிலும் சேர்ந்து விழுந்துடுச்சி. நீங்க வேணும்னா காசு கொடுத்துட்டு ஆயிலும் சேர்த்து வாங்கிட்டு போங்க" என சொல்லி சமாளித்தார். "ஆயிலை பிளாக்ல விற்கத்தான் ரேஷன் கார்ட்ல முதல்லையே மார்க் பண்ணீங்களா" என நான் கேட்டப்ப அவரிடம் பதில் இல்லை.

Saturday, February 12, 2011

பிட்சா ஒரு தமிழ் உணவு

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" -- இதிலிருந்து தமிழ் எவ்வளவு பழமையானது தொன்மையானது என்பது புலப்படும். அவ்வளவு பழமையான கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம். "பகிர்ந்து உண்ணுதல்" தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு பகிர்ந்து உண்ணுவதை வலியுறுத்தும் உணவுகளில் ஒன்று தான் பிட்சா (pizza). நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்ற ஐயம் எழக்கூடும். பிட்சாவை எவ்வாறு பரிமாறுகிறார்கள் என்று எண்ணிப்பார்ப்போமேயானால் அது நமக்கு விளங்கும். பிட்சாவை பொதுவாக நான்காகவோ, ஆறாகவோ, எட்டாகவோ தான் பகிர்ந்து கொடுப்பார்கள். இதை தான் நம் தமிழ் கலாச்சாரமும் எடுத்துரைக்கிறது. நம் பாரம்பரிய உணவான வெங்காய ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம், தேங்காய் ஊத்தப்பம் ஆகியவற்றின் மேல் நாட்டு தழுவல் தான் பிட்சா.

பி.கு.:
இந்த பதிவு எழுதும் பொது, இத்தாலியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்த சான்றுகள் ஏதேனும் இருக்குமோ என்று சிறிய ஆய்வு செய்தேன். ரசிகர்களின் (எவண்டா அவன்!) அதீத வேண்டுகோளால் இப்பதிவை இத்துடன் முடித்துக்கொண்டேன்.

Wednesday, October 20, 2010

நான் பதிவு எழுதியதை பற்றி ஒரு பதிவு...

என் ஆழ்மனதில் கொட்டி கிடக்கும் சில பல எண்ணங்களை கொட்டி தீர்ப்பதற்காகவோ, எனக்கும் நேரம் போகவேண்டும் என்பதற்காகவோ, குறிப்பிட்டு சொல்ல எந்த ஒரு காரணம் இல்லாமலோ, வேட்டியே கட்டாவிட்டாலும் வரிந்து கட்டிக்கொண்டு நான் இப்பதிவகத்தை திறந்தேன். மாதங்கள் 2 ஓடின. அறிமுக பதிவை தவிர பதிவுகளே பிரசுரிக்கப்படவில்லை.

"வாடிக்கையாளர் சேவை! இதெல்லாம் எனக்கு தேவை!!" என்ற தலைப்பிலான என் பதிவிற்க்கான நிகழ்வு 2 மாதங்களுக்கு முன்பே நடந்தேறியது. முதலில் நான் "சற்று நாட்கள் முன்பு நான் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க...." என்று தான் அப்பதிவை எழுத தொடங்கினேன். பின்னர் இன்ன பிற வெட்டி வேலைகளில் நான் முழு கவனம் செலுத்தியதால், அப்பதிவினை முடிக்க முடியவில்லை. மேலும் "சிறிது" தூய தமிழில் எழுத எனக்கு ஏனோ அறிவு பஞ்சம் வந்தது.

அப்பால, சுத்த தமிழ் எல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்ட்டு, சும்மா பேச்சு தமிழ்லயே எழுத (உண்மையில டைப் பண்ணாலும்!) ஆரம்பிச்சி ஓவர் நைட்ல (அப்படி என்னடா நீ சாதிச்சுட்ட?!?!) அந்த மொக்கை பதிவை எழுதி முடிச்சேன். அது ஓரளவு தமிழே கிடையாது. இதுல, நம்ம நட்பு ஒருத்தர் அந்த பதிவை சீரியஸா எடுத்துட்டு நக்கீரன்(ர்) மாதிரி என் பதிவுல குத்தம் கண்டு புடிச்சாரு (கொஞ்சம் ஓவரா தான் போறமோ... போவோம்!!). இருந்தாலும், கால் காசுக்கு போறாத அந்த பதிவை படிச்ச அவரோட மன தைரியத்தை பாராட்டி இந்த பதிவை நான் அவருக்கு சமர்ப்பணம் பண்றேனுங்கோ...

பி.கு.: என் நண்பருக்காக முதல் ரெண்டு பாரா கொஞ்சம் சுத்த தமிழ்ல எழுத முயற்சி பண்ணேன்.

Tuesday, October 19, 2010

வாடிக்கையாளர் சேவை! இதெல்லாம் எனக்கு தேவை!!

நான் 2 மாசம் முன்னால சேவிங்க்ஸ் அக்கௌன்ட் தொடங்க, நாட்டுலயே பறந்து விரிஞ்ச ஒரு பேங்கோட ஒரு பிரேஞ்ச்க்கு போயிருந்தேன். அவங்க நெறைய கிளை உள்ள பெரிய மரம்ன்னு சொன்னாங்க. எங்க ஊருல அது தலை கிளை (அதாங்க மெயின் பிரேஞ்ச்).

அங்க அசிஸ்டன்ட் மேனேஜரை பாத்து அக்கௌன்ட் தொடங்குரதை பத்தி கேட்டேன். அவர் ஒரு கவுண்டருக்கு போயி  பார்ம் வாங்கி பில் பண்ண சொன்னார்.

பார்ம்ல பாதி மேட்டர் எனக்கு புரியல. அது என்னனு நான் அசிஸ்டன்ட் மேனேஜர் கிட்ட கேட்டப்ப, பதில் சரியா வரல. அவர் வீட்டுல என்ன பிரச்சனையோ, இல்லை நான் பண்ண எதாச்சும் மொள்ளமாரி தனத்தை பார்த்திருக்காங்களோ தெரியல, என் கிட்ட சரியாவே பதில் சொல்லலை. நானும் கண்டுக்கலை. நம்ம நேரம் சரியில்லைன்னு நானும் சைடுல விட்டுட்டேன். மத்த கஸ்டமர் கிட்ட அவர் நல்லாவே பேசினார் (பரவாயில்லை!!).

மொத்ததுல மதிக்கவே இல்லை. கஸ்டமர்ங்குற வார்த்தைக்கு அர்த்தமே தெரியலை. செம்ம டென்ஷன் ஆகி கடுப்புல இருந்தேன்.

அப்பால, இன்னொரு கவுண்டருக்கு போய் கம்ப்யூட்டர் பொட்டில டீடைல்ஸ் என்ட்டர் பண்ணனும்னு சொன்னாங்க.
அங்க ஒரு 50 வயது மதிக்கதக்க "பெரியவர்" ஒருத்தர் இருந்தாரு. இதுல பெரிய கொடுமை என்னன்னா firstname lastname பத்தி தெரியல அந்த "அப்ரண்டீசுக்கு". என் பேர் firstname lastname ரெண்டையும் firstname பீல்டுலையே space கூட விடாம அடிச்சுட்டாரு. அவர் கிட்ட சொன்னாலும் ஒத்துக்க மாட்டேனுட்டார். இதுல என் பின்னால க்யூல நின்ன ஒருத்தர் அந்த அப்ரண்டீசுக்கு சப்போர்ட் (அவனா நீ!!). என்னோட தொந்தரவு தாங்க முடியாம அவர் firstname-க்கும் lastname-க்கும் இடைல சுமார் 10 space விட்டாரு, ஆனா firstname lastname ரெண்டையும் firstname பீல்டுலையே போட்டாரு (இப்பவே கண்ணை கட்டுதே). அப்புறம் lastname பீல்டு எம்ப்டியா இருந்ததுக்கு error காட்டுச்சி. அதுக்கு அந்த அப்ரண்டீசு ஒரு டாட் (.) போட்டாரு (சப்பா... தாங்க முடியலடா சாமி!!). கடைசில என்கிட்ட"என்னப்பா இது பிரச்சனை பண்ணிருக்க பாத்தயே"ன்னு கேட்டாரு (அக்கௌன்ட் கிரியேட் பண்ண போனது தப்பா!!).

கவுண்டர் விட்டு கவுண்டர் மாறி கஷ்ட பட்ட எனக்கு "கவுண்டர்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு:
"ஐயோ ராமா! என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வைக்குர!!"