Tuesday, May 24, 2011

என்னத்த சொல்ல!!

வடை போச்சே!

'சூடான வத்தல்' கடையில் சூடான மெது வடை சாப்பிடலாமென்று போயிருந்தோம். அப்போது முன்னமே செய்து வைத்திருந்த சூடில்லாத வடைகள் சில இருந்தன. கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை சூடான வடையா கொடுங்க என அங்கு கவுன்டரில் இருந்தவரிடம் சொன்னேன். சூடான வடைகள் தயாரானதும் அவற்றை ஆறிய வடை கூட கலந்து போட்டார். அப்புறம் சூடான வடைல ஒன்னு ஆறிய வடைல ஒன்னு கொடுத்தார். நான் சுட்டி காட்டியும் அவர் அது சூடான வடைதான்னு சொன்னார். அவர் வியாபார உத்தியை கண்டு மெய்மறந்து போனேன்.

நரி கூட காக்கா கிட்டருந்து வடை வாங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காது!
------------------------------------------

விலைக்கடை

சென்ற வாரம் ரேஷன் கடைக்கு சர்க்கரை வாங்க சென்றிருந்தேன். அங்கு கவுன்டரில் இருந்தவர் ரேஷன் கார்டில் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெயும் வாங்கியதாக குறித்தார். பின்னர் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து மின்னணு ரசீது எந்திரத்தில் (electronic billing machine) போட்டு சமையல் எண்ணெயை கிராஸ் செய்தார். சர்க்கரைக்கு மட்டும் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டார். நான் ஏன் சமையல் எண்ணெயை சேர்த்தீர்கள் என கேட்ட போது, "அப்டி இப்டி அமுக்கும் போது ஆயிலும் சேர்ந்து விழுந்துடுச்சி. நீங்க வேணும்னா காசு கொடுத்துட்டு ஆயிலும் சேர்த்து வாங்கிட்டு போங்க" என சொல்லி சமாளித்தார். "ஆயிலை பிளாக்ல விற்கத்தான் ரேஷன் கார்ட்ல முதல்லையே மார்க் பண்ணீங்களா" என நான் கேட்டப்ப அவரிடம் பதில் இல்லை.

No comments:

Post a Comment